Tamil 10

Tuesday, June 2, 2009

இந்தியா 2020 : வல்லரசு கனவை கனவாகவே மாற்றும் காரணிகள்!!!

இந்தியாவின் வல்லரசு கனவை கனவாகவே மாற்ற முயற்சிக்கும் காரணிகள் இவை:

 தவறு செய்தவனுக்கு தண்டனை
 நிச்சயம் – சட்டம் தன் கடமையைச் 
 செய்யும்...ஆனால் அரசியல்வாதி 
 ஆகிவிட்டால்? – சட்டம் அவன் கடமையைச்
 செய்யும்.


 ”ஜாதிகள் இல்லையடி பாப்பா”
 பொது மேடையில் புதிய
 ஜாதிக் கட்சி தலைவர் முழக்கம்..?

  கட்சிக்கு பயன் இல்லாததால்
  கூட்டணி மாறினோம் – அப்போது
  கொள்கை...? மக்கள்...?

  லஞ்சத்தை அடியோடு ஒழிப்போம்
  பொதுக்கூட்டத்தில் பேச பணம்
  வாங்கிய பேச்சாளர்..?  


  காவல் துறை உங்கள் நண்பன்
  அதனால்தான் அடிக்கடி கேட்கிறார்கள்
  வாராக்கடன் - எங்கும்..?

  பெண்களுக்கு 33% இட 
  ஒதுக்கீடு – மும்பையில் சிவப்பு
  விளக்கு பகுதிக்கு சிறப்பு அனுமதி.?

  எதிர்கால இந்தியா இளைஞர்
  கையில் – அரசு மதுக்கடையில்
  புதிதாக “பார்” வசதி அறிமுகம்
  அரசாங்க அறிவிப்பு...?


  ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக
  முறைப்படி ஓட்டுப்போட வேண்டும்.
  ஆனால் எத்தனை ஓட்டுகள்...?

  ஏற்றத்தாழ்வுகள் இல்லா சமுதாயம்
  படைப்போம் – தாழ்த்தபட்டோருக்கு தனி
  இட ஒதுக்கீடு கேட்கும் பேரணியின்
  முழக்கம்...?

  நடிகை காதலில் விழுந்தார்

  தலைப்புச் செய்தி – பட்டினியால்

 விவசாயி தற்கொலை கடைசிப்

  பக்க பொட்டிச் செய்தி ...?

  கோவிலில் கடவுளுக்கு பால்
  அபிஷேகம் – அடுத்த தெருவில்
  பாலில்லாமல் பச்சிளங்குழந்தை மரணம்..?

  காந்தி வழி நடப்போம்..புதுக்கட்சி
  தலைவர் முழக்கம் – ஆர்வமாய் கேட்ட
  கூட்டம். ஒரு கையில் பிரியாணியும்
  மறு கையில் காந்தி நோட்டுமாய்...?


  துடிப்பு மிக்க நூறு இளைஞரை
  கேட்டார் விவேகானந்தர் – ஆனால்
  இன்று நூறாயிரம் பேர் இருந்தும்
  ஒரு விவேகானந்தர் இல்லை.

   

  எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர் கையில்
  என்று எவனாவது சொன்னால் எட்டி மிதியுங்கள்.
  இவன் என்ன கிழித்தானாம் நமக்குச் சொல்ல. இருபது
  வருடத்திற்கு முன் அவன் கேட்ட அதே வாக்கியத்தை
  இன்றும் பிழை மாறாமல் சொல்ல மட்டுமே செய்கிறான்.
  எதுவும் செய்யவில்லை.


  நாமும் பிழை மாறாமல் சொல்ல போகிறோமா?
  இல்லை – பிழைகளை வெல்ல போகிறோமா?
  வேரூன்றி விட்டன விஷமங்கள்.. வெட்டி எடுக்க
  வீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.
  விண்ணைப் பிளக்கும் புரட்சி வேண்டும். போராடுங்கள்
  என்று மூன்றாம் மனிதனாய்ச் சொல்லவில்லை..போரிடுவோம்
  வாருங்கள் என்று முதல் மனிதனாய்ச் சொல்கிறேன்.

  நீயும் நானும் இளைஞர்கள்..உன்னுள் இருக்கும் சக்தி
  என்னுள் இருக்கும் புத்தி, புரட்டியெடுப்போம், புது
  சமுதாயம் படைப்போம். நமை வெல்ல எந்த நமனும்
  இல்லை. புன்னகை தேசத்தில் புது பூக்கள் படரவிடுவோம்...

  வா தோழா!!!. வாழ வைப்போம்!!! வாழ்ந்து காட்டுவோம்....

நண்பர்களே! ஏதோ எனக்கு தோன்றியதை கிறுக்கி உள்ளேன்.. நன்றாக இருந்தா ஒரு ஓட்டு போடுங்கள்...இல்லை என்றால் மறக்காமல் உங்கள் கருத்துகளை போடுங்கள்....


Top Tamil Blogs by Tamilers

9 comments:

ஆர்வா said...

//எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர் கையில்
என்று எவனாவது சொன்னால் எட்டி மிதியுங்கள்.//

சிவப்பு சிந்தனை.. அருமையா இருக்கு

வினோத்குமார் said...

நன்றி நண்பா

வனம் said...

வணக்கம் வினோத்குமார்

நல்லாதாம்ல இருக்கு ஆனா வெறும் கூப்பாடகவே இருக்கு

\\துடிப்பு மிக்க நூறு இளைஞரை
கேட்டார் விவேகானந்தர் – ஆனால்
இன்று நூறாயிரம் பேர் இருந்தும்
ஒரு விவேகானந்தர் இல்லை.\\
அதென்ன என்ன வானத்துல இருந்தா குதித்தார், நாம எல்லோருமே விவேகானந்தர் ஆகும் தகுதியுடையவர்கள்தான்

வெளியில் தேடவேண்டாம் -- ஒன்றுபடுவோம், சிந்திப்போம், செயல்படுத்துவோம் -- ஏற்றம்பெருவோம்

இராஜராஜன்

வினோத்குமார் said...

உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி இராஜராஜன்.

ஆ.ஞானசேகரன் said...

முரண்பாடான இந்தியாவை காட்டி தோலுரித்துள்ளீர்கள் நண்பா..


//நீயும் நானும் இளைஞர்கள்..உன்னுள் இருக்கும் சக்தி
என்னுள் இருக்கும் புத்தி, புரட்டியெடுப்போம், புது
சமுதாயம் படைப்போம். நமை வெல்ல எந்த நமனும்
இல்லை. புன்னகை தேசத்தில் புது பூக்கள் படரவிடுவோம்...//

நம் சக்தி இணை வேற்றொன்றும் இல்லை
வாழ்த்துகள் நண்பா

வினோத்குமார் said...

thanks gnanasekaran

தீப்பெட்டி said...

நல்லா எழுதுறீங்க பாஸ்..
வாழ்த்துகள்..

வினோத்குமார் said...

nandri theepeti...

வெண்காட்டான் said...

nandru

Post a Comment